Welcome to Urumpirai web site

வணக்கம்.

கருணாகரப்பிள்ளையார் ஆலயம்.

திருவிழா படங்கள்.


கருணாகரப்பிள்ளையார் ஆலயம். ‘கருணாகரன் பாதம் கனவிலும் துணை செய்யும்’ என்று கூறுவார்கள். உரும்பிராயில் இருந்து இணுவில் செல்லும் வழியில் அமைந்துள்ள மருதநிலச் சு10ழலில் பரத்தைப்புலம் என்றழைக்கப்படும் திவ்விய சேஷத்திரத்தில் கருணாகரப்பிள்ளையார் கோவில் கொண்டுள்ளார். உரும்பிராயில் உள்ள ஆலயங்களில் சரித்திரப்பிரசித்தி வாய்ந்த ஆலயம் இது. யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்திற்கும் முந்திய பூர்வீக ஆலயம் இதுவாகும். விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி கருணாகரப்பிள்ளையாரை வணங்கி அருள்பெற்றதாகவும், ஆலயத் திருப்பணிகளுக்கு உதவியதாகவும் சரித்திரம் கூறுகின்றது. ஆலயத்தின் பழமையையும்,பெருமையையும் எடுத்துக்காட்டும் வகையில் கல்வெட்டுச் சாசனமும் இங்கே உண்டு. தற்போது புனருத்தாரணம் செய்யப்பட்டு அழகிய இராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. கருணாகரப்பிள்ளையார் கோவிலை அண்மித்ததாக, சிதம்பரசுப்பிரமணிய சுவாமி கோவில், பர்வதவர்த்தனி அம்மன் கோவில் என மூன்று கோவில்களை இங்கே காணலாம். பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில்களின் வரிசையில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

நன்றி


Web Site
:
Map
Lates Galleries கருணாகரப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிசேகம்.
Click for Full Screen