Welcome to Urumpirai web site

வணக்கம்.

திருவிழா படங்கள்.


கற்பகப் பிள்ளையார் கோவில் கிட்டத்தட்ட உரும்பிராயின் நடுப்பகுதியில் அமைந்திருக்கின்றது. உரும்பிராயில் உள்ள இந்து ஆலயங்களில் மிகப்பெரிய ஆலயம் இது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து சுமார் 800 யார் தூரத்தில் ஊரெளு நோக்கிச் செல்லும் பலாலி வீதியில் ஓடயம்பதியில் அமைந்திருக்கின்றது. ஆலயத்தின் முகப்பில் உரும்பிராயின் எந்தப்பகுதியிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய பஞ்ச தளங்களைக் கொண்ட கம்பீரமான இராஜகோபுரமும்ää அதனருகே இருபுறமும் அமைந்திருக்கும் மணிக்கூட்டுக் கோபுரங்களும் ஆலயத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. ஆலயத்தின் தென்மேற்குப் பகுதியில் அம்மன் கோவிலும்ää வடக்குப் பகுதியில் வையிரவர் கோவிலும் ஆலயத்திற்கென தனியழகை ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன. ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும்ää கிழக்குப்பகுதியில் உரும்பிராய் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க மண்டபமும்ää வடக்குப்பகுதியில் உரும்பிராய் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையும் அமைந்திருக்கின்றன. அதிகாலை வேளைகளில் கணீரென்று ஒலிக்கும் ஆலயமணி காதுகளைக் குளிர வைப்பதோடு அனைவரையும் துயிலெழுப்பி பக்திப்பரவசத்தில் ஆழ்த்திவிடும். புலம்பெயர்ந்த உரும்பிராயின் மக்களால் அண்மைக் காலத்தில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் பதுப்பொலிவுடன் காணப்படுகின்றது.

ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆனி மாதப் பூரணி நட்சத்திரத்தை தீர்த்தத் தினமாகக் கொண்டு நடைபெறுகின்றது. இத்திருவிழாக்களையும்ää இரத பவனியையும் காண உலகத்தின் பல பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் தாம் பிறந்து வளர்ந்த உரும்பிராய் மண்ணை நோக்கிய புனித யாத்திரை செய்வார்கள். கற்பகவிநாயகர் திருவந்தாதி என்னும் நூலினை ஆசிரியரும்ää உரும்பிராய் வடக்கின் மைந்தருமான கவிஞர் செ.ஐயாத்துரை அவர்களும்ää கற்பகவிநாயகர் அந்தாதி என்னும் நூலினை கோயிலாக் கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான சு.பொ.குழந்தைவடிவேலு அவர்களும் இயற்றி அரங்கேற்றினர்.

நன்றி


Web Site
: katpha pillaiyar
Map
Lates Galleries