Welcome to Urumpirai web site
வணக்கம்.
சிவபூதநாதர் கோவில் உரும்பிராயின் கிழக்கு எல்லையில் வடபுறமாக அமைந்திருப்பது சிவபூதநாதர் ஆலயம். கரந்தன் நீர்வேலி கோப்பாய் ஆகிய இடங்களை அண்மித்து இருப்பதனால் அவ்வூர் மக்களது வழிபாடு இங்கே விசேடமாக இடம்பெறுகின்றது. ஆலயத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்களே நிறைந்திருப்பதனால் எந்நேரமும் பச்சைப்பசேல் என்றே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயத்தில் புதிய சித்திரத்தேரும் சித்திரைப் பூரணையை அடுத்துவரும் அமாவாசைத் தினத்தை இறுதி நாளாகக் கொண்டு பக்திபூர்வமாக அலங்காரத் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. அன்னதானமும் சிவராத்திரி தினத்தில் சிறுவர்களுக்கான போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்கிவருவதும் சிறப்பானவையாகும்.
நன்றி
Map
Lates Galleries