Welcome to Urumpirai

வணக்கம்.


உரும்பிராய் இந்துக் கல்லூரி உரும்பிராய் இந்துக் கல்லூரி சைவமும், தமிழும், வீரமும் செறிந்த உரும்பிராய்க் கிராமத்தின் கல்விப் பசியைத் தீர்ப்பதற்காக 1911 ஆம் ஆண்டு உரும்பிராய் வாழ் சைவப் பிரமுகர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பலாலி வீதியில் சுமார் 5 மைல் தொலைவில் அமைந்திருக்கின்றது. ஆங்கில மொழிக்கு அந்தஸ்து இருந்த காலத்தில் உரும்பிராய் மாணவர்களும், அயலூர் மாணவர்களும் சமயைக் கோட்பாடுகளையும், ஆங்கில மொழியையும் அறிந்து கொள்ள உதவியது உரும்பிராய் இந்துக் கல்லூரி. மலாயன் உரும்பிராயர் சங்க மண்டபம் (வடக்குப் பகுதி) மலேயாவில் வாழும் உரும்பிராய் மக்களின் உதவியினாலும், பழைய மாணவர், பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் அமைக்கப்பட்டது. பொன்விழா மண்டபம் (மத்திய பகுதி) பாடசாலையின் 50 ஆம் ஆண்டு நிறைவையொட்டியும் அமைக்கப்பட்டது. தனது பவள விழாவை முடித்து தற்போது 100 ஆவது வருடத்தைக் கடந்து முன்னேறி வருகிறது. இலண்டன் உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவன் திரு கந்தசாமி தர்மகுலசிங்கம் அவர்களால் புதிய பிரார்த்தனை மண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

Urumpirai Hindu College is one of those institutions that were established in 1911 for the purpose of imparting education with an essentially Hindu religious background by few Hindu well-wishers. UHC is situated in Palaly road at about 5 miles from Jaffna town. Urumpirai Hindu College that bring education within the reach of the village people and enrich their lives. The Malayan Urumpiraiyan Building (North side) was built by Malaysian Urumpirai people, old students, parents and teachers. The Golden Jubilee building (middle) was built after 50th birthday of the school. Now it reaching 100 years. United Kingdom Urumpirai old students association is planning to build a new prayer hall in the near future. The moto “To thine Ownself be true” is well respected by UHC’s students.

நன்றி


Web Site
: UHC
Map
Lates Galleries