Welcome to Urumpirai web site

செம்பாட்டு மண்ணும் மரவள்ளி கிழங்கும் மறந்து போகுமா......

வணக்கம்.

Location: Asia –> Srilanka –> Jaffna -> Urumpirai
இருக்குமிடம்: ஆசியாக்கண்டம் -> இலங்கை -> யாழ்ப்பாணம் -> உரும்பிராய்.

உலக உருண்டையிலே அமைந்துள்ள ஐந்து கண்டங்களில் பெரியது ஆசியாக் கண்டம். அதிலே இந்திய உப கண்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் மாங்காய் வடிவாக அமைந்திருப்பது இலங்கைத்தீவு. இலங்கைத்தீவின் தலையாக அமைந்திருப்பது யாழ்ப்பாணத் தீபகற்பம். உரும்பிராய்க் கிராமம் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்குப்புறமாக சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கின்றது. வடக்குத் தெற்காகச் செல்லும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி

urumpirai

உரும்பிராயை சரி பாதியாக ஊடறுத்துச் செல்கின்றது. அதேபோல் மருதனாமடம் வீதி மேற்கேயும், கோப்பாய் வீதி கிழக்கேயும் உரும்பிராய்ச் சந்தியிலிருந்து சரி பாதியாக ஊடறுத்துச் செல்கின்றன.

உரும்பிராய் பூமத்தியரேகையிலிருந்து 9.7167 பாகை பாகை வடக்கு நோக்கியும்ää அட்சரரேகையிலிருந்து 80.0333 பாகை கிழக்கு நோக்கியும் அமைந்திருக்கின்றது. சுமார் 7 கி.மீ விட்டத்தை உரும்பிராய் மண் கொண்டிருக்கின்றது. இங்கே கிட்டத்தட்ட 80,000 மக்கள் வாழ்கின்றனர். உரும்பிராய் பட்டினம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Map
Lates Gallery